வாஸ்து என்னும் அறிவியல்
- பூமியானது ஒரு குறிப்பிட்ட சாய்மான கோணத்தில் (சாய்மான அச்சில்) தன்னைத்தானே சுழன்றுகொண்டு இருக்கின்றது. அதனால் ஏற்படும் சுழற்சிவிசையினால் வான்மண்டல ஆக்க சக்தி ஒரு குறிப்பிட்ட சாய்மான கோணத்தில் உறுஞ்சப்பட்டு பூமியின் மற்ற பகுதிகளை சென்று அடைகின்றது.
- பூமியானது ஒரு குறிப்பிட்ட சாய்மான கோணத்தில் (சாய்மான அச்சில்) தன்னைத்தானே சுழன்றுகொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றுது. அதனால் உத்ராயணகாலத்தில் (கோடைகாலத்தில்) சூரியனின் ஒளியானது பூமியின் மீது சற்று வடக்குப்பக்கமாக பயணம் செய்கின்றது. அதுவே தஷ்ணாயணகாலத்தில் (குளிர்காலத்தில்) சூரியனின் ஒளியானது பூமியின் மீது தெற்குப்பக்கமாக பயணம் செய்கின்றது.
- பூமியானது தன்னைத்தானே சுழல்வதன் காரணமாக ஆக்க சக்தி நிறைந்த கற்று பூமியை எதிர் திசையில் கடந்து செல்கின்றது.
- பூமியானது ஒரு மிகப்பெரிய காந்தமாக செயல்படுகின்றது. மற்றும் அது வட துருவம், தென் துருவம் என இருதுருவங்களை கொண்டுள்ளது. மேலும் வட துருவம் நேர் ஆற்றலாகவும், தென் துருவம் எதிர் ஆற்றலாகவும் செயல்படுகின்றது.
- சூரியனின் ஒளியானது பூமியின் மீது குறிப்பிட்ட சிலப்பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் ஆக்க சக்தியினை வெளிப்படுத்துகின்றது (உச்சப்பகுதி). மற்றும் பிறபகுதிகளில் தீய சக்தியினை வெளிப்படுத்துகின்றது (நீச்சபகுதி).
- உயிர் சக்தி (அண்ட சக்தி / காஸ்மிக் ஆற்றல்)
- சூரிய சக்தி (ஒளியின் ஆற்றல் / வெப்பத்தின் ஆற்றல்)
- காந்த சக்தி
- நிலத்தின் சக்தி
- நீரின் சக்தி
- நெருப்பின் சக்தி
- காற்றின் சக்தி
- ஆகாசத்தின் சக்தி (விண்மீன்களின் சக்தி)
பூமிநாதர் வாஸ்து
வாஸ்து நூறு சதவீதம் உண்மை.
வாஸ்து நூறு சதவீதம் அறிவியல் சார்ந்தது.
தெய்வத்தின் அனுக்கிரகமும், நல்ல ஜாதக அமைப்பையும் கொண்ட ஒருவருக்கு வாஸ்து சாத்தியமாகிறது.
ஒரு வீட்டின் வாஸ்த்தைப் பார்த்து அவ்வீட்டில் குடியிருப்பவர்களின் ஜாதகத்தை அதாவது அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றயிறக்கங்களை கூறமுடியும்.
ஒரு வீடு சரியான வாஸ்துபடி அமைந்திருந்தால் அவ்வீட்டினில் குடியிருப்பவர்கள் சகலசௌபாக்யங்களுடன் சிறப்பாக வாழ்வார்கள்.
வாஸ்து நூறு சதவீதம் அறிவியல் சார்ந்தது சூரிய சக்தியே வாஸ்து என்று மக்களை நம்பவைப்பதற்காக சொன்னாலும், வாஸ்துவில் கூறப்படும் நல்ல மற்றும் தீயபலன்களை அறிவியலின் படி நிரூபிக்கமுடியாததொன்றாகவே உள்ளதால், வாஸ்துவை அறிவியல் மட்டுமே சார்ந்தது என்றும் கூறிவிடமுடியாது.
உதாரணமாக – பூமியானது ஒரு குறிப்பிட்ட சாய்மான கோணத்தில் (சாய்மான அச்சில்) தன்னைத்தானே சுழன்றுகொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றுது என்பது அறிவியல். அதாவது மனித சக்திக்கு அப்பாற்பட்டு எவையெல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றதோ அதை நாம் எப்போது தெரிந்துகொண்டோமோ அன்றிலிருந்து அது அறிவியல். நமக்கு இந்த நிகழ்வு தெரிவதற்குமுன்பாகவும் அது நிகழ்ந்துகொண்டுதானிருந்தது.
நான் இங்கு அனைவருக்கும் தெளிவுபடுத்துவது என்னவென்றால் பூமியானது எவ்வாறு சுற்றுகின்றது? அது ஏன் சூரியனை சுற்றுகின்றது? அது யாரால் சுற்றுகின்றது? இதுபோன்ற பல வினாக்களுக்கு நம்மிடத்தில் பதில் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். எனவே அனைத்து சாஸ்திரங்களும் அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அவையெல்லாம் இறைசக்திக்கு உட்பட்டது என்றும் நான் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.
வெளிநாட்டில்வாழும் மக்களெல்லாம் வஸ்துப்படிதான் அவர்களது வீடுகளை அமைத்துக்கொண்டார்களா? அவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்பது தெய்வத்தினை பிராத்தனை செய்யாதவர்கள்கூட நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்பதற்குச்சமம். இதில் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது கண்ணுக்குத்தெரிந்த பிரபலமானவர்களைத்தான், கண்ணுக்குத்தெரியாத பலவிஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ந்துபார்த்தால் அதன் உண்மைதன்மைத் தெரியவரும். இதில் எனது கருத்துயாதெனில் எவராகயிருந்தாலும் அவருக்கான விதிப்படி வாஸ்து மற்றும் ஜாதகம் தானாகவே அமைந்துவிடும். அதனை பிரதானமாகக்கொண்டே அவர்களது வாழ்கை நகர்ந்துகொண்டிருக்கும்.
நான் இங்கு அனைவருக்கும் ஒரு மறுக்கமுடியாத உண்மையை தெளிவுபடுத்த விரும்புகிறேன்
நாம் இப்பூமியில் பிறக்கும்போதே இப்படித்தான் வாழவேண்டும் என நம் விதி நிர்ணயித்துவிடுகின்றது நமது வாழ்நாட்களில் ஏற்படும் ஏற்றயிறக்கங்களும் இதன் அடிப்படையிலே நடந்துவருகின்றன எவராலும் இதை தடுக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது. அதாவது நமக்கான ஜாதகமும் நமக்கு அமையும் வாஸ்துவும் நாம் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்பட்டதொன்று. அதாவது இவ்வுலகத்தில் நாம் எவ்வாறு வாழவேண்டுமென நிர்ணயிக்கப்பட்டதோ அவ்வாறு அது தானாகவே அமைந்துவிடும். இதில் நமக்கான ஜாதககட்டங்களை நம்மால் திருத்தி அமைக்கமுடியாது. ஆனால் அதன் பலன்களைப்பற்றி தெரிந்துகொள்ளமுடியும். ஆனால் நமக்கான வாஸ்துவை நாம் பெறுவதற்கும் மாற்றியமைக்கவும் நம்மால் முயற்சிசெய்யமுடியும்.
ஒரு வீடு சரியான வாஸ்துபடி அமைந்திருந்தால் அவ்வீட்டினில் குடியிருப்பவர்கள் சகலசௌபாக்யங்களுடன் சிறப்பாக வாழ்வார்கள் என்பது எவராலும் மறுக்கமுடியாத மற்றும் நிரூபிக்கப்பட்ட உண்மை. இதனை பிரதானமாக எடுத்துக்கொண்டு நாம் செயல்படவேண்டும்.
நமது விதிப்படி சரியான வாஸ்துஅமைப்பைபெற்ற வீடு அமையுமா அல்லது வாஸ்துக்குறைபாடுள்ள வீடு அமையுமா என்பது நாம் வீடு கட்டியபின்பே தெரியவரும் அவ்வாறு தெரியவரும்போது நம்மால் அதனை மாற்றியமைக்கமுடியாது எனவே ஒவ்வொருவரும் தகுந்தநேரங்களில் வாஸ்து சாஸ்திரவிதிகளை முறையாகபின்பற்றி அதனால் கிடைக்கப்பெறும் நற்பலன்களையடைய முயற்சிசெய்யவேண்டும்.
வாஸ்துக்கும், ஜோதிடத்திற்கும் மிகநெருங்கிய தொடர்புண்டு பொதுவாக ஜோதிடத்தை பிரதானமாகக் கொண்டே நம் வாஸ்து செயல்படும். ஜோதிடக்கட்டங்கள் சரியாக இருந்தால்தான் வீடு கட்டமுடியும். அதிலும் நம் ஜாதகம் நல்ல நிலைமை பெற்றுயிருந்தால்தான், நம்மால் முழுமையான வாஸ்துபடி வீடு கட்ட முடியும். நூறு சதவீதம் வாஸ்து தெரிந்த வாஸ்து நிபுணர்களால்கூட தங்களுக்கு ஒரு சொந்தவீட்டினைக் கட்டமுடியாமல் போவதற்கும் அல்லது அவர்களுடய பழைய வீட்டினை நூறு சதவீதம் வாஸ்துப்படி மாற்றியமைக்கமுடியாமல் போவதற்கும் அவர்களது ஜாதகமே (விதியே) காரணம்.
வாஸ்து ஆலோசகர் & நிறுவனர் – கரிகாலன் கு