பூமிநாதர் வாஸ்து
என் உலக தமிழ்மக்கள் அனைவருக்கும் வணக்கம். பூமிநாதர் வாஸ்து என்ற இந்த “இணையதளம்” வாயிலாக மக்கள் அனைவருக்கும் வாஸ்து என்றால் என்ன? வாஸ்து எவ்வாறு செயல்படுகின்றது? வாஸ்துவின் பலன்கள் என்ன? வாஸ்துவில் கடைபிடிக்கவேண்டிய நுணுக்கங்கள் என்ன? என்ற பல அறிய வாஸ்துபற்றிய விளக்கங்களை அனைவரும் எளிமையாக புரிந்துகொள்ளும்வகையிலும், பயனடையும்வகையிலும் விளக்கப்படங்களின் உதவிகொண்டு தெளிவாக விளக்கிக்கூறவுள்ளேன், என்பதனை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வளர்ந்துவரும் நாகரிக உலகில் வீடுகட்டும் அல்லது வாங்கும் மக்களில் பெரும்பாலானோர் வாஸ்து என்ற ஒரு வார்த்தையை அறிந்துயிருந்தாலும், அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்துள இக்காலகட்டத்தில் வாஸ்து என்பது ஒரு மூடநம்பிக்கையென்றும் மக்களை ஏமாற்றும் வேலையென்றும், வாஸ்து இந்துமத்தினை சார்ந்த மிகப்பெரிய யோகிகளாளும், ஞானிகளாலும் கண்டறியப்பட்ட அறிவியல் பொக்கிஷம் என்பதனை அறியாது, அதனை தவிர்த்துவிடுகின்றார்கள். மேலும் நாம் பார்க்கும் பெரும்பாலான பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள்யெல்லாம் நம் இந்துமதத்தினை சார்ந்த அனைத்து சாஸ்திரங்களையும், நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துவதாகவே உள்ளது. அதில் மறைந்துள்ள அறிவியலையும் மக்களுக்குப் பயன்படும் நல்ல பல தகவல்களையும் எடுத்துக்கூற ஒருபோதும் முற்படுவதில்லை. இதன்காரணமாக நம்மில்பலர் தகுந்த தேவையான காலகட்டங்களில் மதிப்புமிகுந்த சாஸ்திரங்களை பின்பற்ற தவறிவிடுகின்றோம். பிற்காலங்களில் நாம்பட்ட கஷ்டங்களுக்கும், இன்னல்களுக்கும் முறையான சாஸ்திரவிதிகளை பின்பற்றாததே காரணம் என்று நாம் அறியும்போது, அதை மாற்றியமைக்கும் திறனற்றவர்களாக செய்வதறியாது மனக்கவலையுற்று பரிகாரங்களை தேடியலைகின்றோம். எனவே நாம் செய்யும் எந்த ஒரு நற்காரியமானாலும் அதற்குரிய சாஸ்திரவிதிகளை சரியான காலகட்டத்தில் முறையாகபின்பற்றி அதனால் கிடைக்கப்பெறும் நற்பலன்களைப்பெற்று வளமாக வாழ்வோமாக எனகூறிக்கொண்டு எனது சேவையைத் தொடங்குகிறேன்.
வாஸ்து ஆலோசகர் & நிறுவனர் – கரிகாலன் கு
+91 7538861560